சிம்பு படத்தில் மெகா மோசடி? தோண்ட தோண்ட அதிர்ச்சி... சிக்கும் பிரபல தயாரிப்பாளர்

x

தமிழ்நாடு திரையரங்கு உரிமை விவகாரத்தில் ஆறு கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிரபல தயாரிப்பாளர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஹன்சிகா மோத்வானி, சிலம்பரசன் ஆகியோர் நடித்து, இயக்குநர் ஜமீல் இயக்கிய மஹா திரைப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படத்தை எட்செட்ரா என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார். இந்தப் படத்தை தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்கான உரிமையை அளிக்க ஆன்ஸ்கை டெக்னாலஜி என்ற விநியோக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால், ஒப்பந்தத்தை மீறி தயாரிப்பாளர் மதியழகன் மோசடி செய்ததாக ஆன்ஸ்கை டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாகி மோட்டூ, நீதிமன்றத்தை நாடி வழக்கு பதிவு செய்ய உத்தரவு பெற்றிருந்தார்.

இதன்படி, திரைப்பட தயாரிப்பாளர் மதியழகன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்