சென்னையில் பட ப்ரமோஷனுக்கு சென்ற பிரபல இயக்குனர் மரணம்
சகுனி திரைப்படத்தின் இயக்குநரான சங்கர் தயாள், மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்.. அவருக்கு வயது 54.... கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'சகுனி' திரைப்படத்தை இயக்கியவர் சங்கர் தயாள்.. சுமார் 12 ஆண்டுகள் கழித்து, யோகிபாபுவை வைத்து 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற திரைப்படத்தை சமீபத்தில் இயக்கியிருந்தார். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற சங்கர் தயாள், நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சங்கர் தயாள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மறைந்த சங்கர் தயாளுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது புதிய படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில், இயக்குநர் சங்கர் தயாள் உயிரிழந்த சம்பவம், திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.