சிக்கலில் இயக்குநர் சங்கர்? - கமலை வைத்து பஞ்சாயத்து பேச திட்டமா?

x

இயக்குநர் சங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம், வரும் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் எதிர்மறையான விமர்சனத்தால், இந்தியன் 3-ல் எஞ்சியுள்ள படப்பிடிப்பு விவகாரம் தொடர்பாக லைகா நிறுவனம் மற்றும் ஷங்கருக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. கேம் சேஞ்சர் பட வெளியீட்டுக்கு பின் கமல்ஹாசனை வைத்து பேசிக் கொள்ளலாம் என சங்கர் தரப்பு நினைப்பதாக கூறப்பட்டாலும், இந்தியன் 3 பட விவகாரம் தொடர்பாக முடிவு தெரியாமல், கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக் கூடாது என லைக்கா தரப்பு புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கமும், லைக்கா நிறுவனத்திற்கு ஆதரவாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் திட்டமிட்டபடி கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாவதில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்