சாய் பல்லவியின் அடுத்த பட ஹீரோ இவரா? - ரசிகர்கள் உற்சாகம்

x

அமரன் திரைப்பட பீவரில், சாய் பல்லவியின் கதாபாத்திர நினைவுகளில் இருந்து இன்னும் வெளிவராத ரசிகர்களுக்குத்தான் இந்த இன்பச் செய்தி...

மீண்டும் ஒரு முறை.. ஒரு முழு நீளப்படமாக சிவகார்த்திகேயனும் - சாய்பல்லவியும் சேர்ந்து நடிக்க மாட்டார்களா என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்ததற்கிடையேதான், இந்த அறிவிப்பு

அமரன் திரைப்படத்தால், மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகை சாய்பல்லவி, தனது அடுத்த மலையாள திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது..

துல்கரும், சாய் பல்லவியும் கடைசியாக கடந்த 2016இல் மலையாள திரைப்படமான “கலி“ திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில், சுமார் 8 வருடங்களுக்கு பின் மீண்டும் சேர இருக்கும் இந்த ஜோடியை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்..

தனித்துவ நடிப்பிலும், தேர்வு செய்யும் படங்களின் வாயிலாகவும் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருந்த நடிகை சாய் பல்லவி, இதனை அமரன் திரைப்படம் மூலம் மேலும் இறுக பிடித்திருக்கும் நிலையில், இந்த அறிவிப்பை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்