உச்சகட்ட கோபத்தில் சாய் பல்லவி கொடுத்த எச்சரிக்கை
கிசு கிசு என்ற பெயரில் முட்டாள்தனமான விஷயங்கள் பரவுவதை கண்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் நடிகை சாய் பல்லவி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும், சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சைவ உணவுக்கு மாறி, செல்லும் இடங்களுக்கு சமையலரை அழைத்து செல்வதாகவும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சாய் பல்லவி, வதந்திகள், பொய்கள், தவறான அறிக்கைகள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதைக் காணும் போதெல்லாம், கடவுளுக்கு தெரியும் என்று அமைதியாக இருப்பதையே தேர்வு செய்வதாக கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து நடப்பதால், எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ள சாய் பல்லவி, அடுத்த முறை கிசுகிசு என்ற பெயரில் முட்டாள்தனமான கதையை கண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.