வேண்டுதல் நிறைவேறிய அதிசயம் சொன்னதை செய்த ஆர்.ஜே.பாலாஜி சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம் இன்றும் சிலையாய் நிற்கும் சாட்சிகள்

x

நேர்த்திக்கடனாக உருவ பொம்மை செலுத்தும் அதிசயக் கோயிலில் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜியும் சிலை வைத்துள்ளார்... இது குறித்த சுவாரஸ்ய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

வேண்டியது நிறைவேறினால் மொட்டையடித்து...அலகு குத்தி...காவடி எடுத்து...கிடாய் வெட்டி...நேர்த்திக்கடன் செலுத்திக் கேட்டிருப்போம்...

ஆனால் இந்த அதிசய கோவிலில் வேண்டுதல் நிறைவேறினால் அதை சிலையாய் வடித்து படைக்க வேண்டும்...

கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான சிலைகளுக்கு மத்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார் நம் அழகு முத்தையனார்...

காக்கும் தெய்வம் அழகு முத்தையனாரைக் காண எப்போதும் திருவிழாவைப் போல் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்...

கோவில் என்றால் கலைநயமிக்க கோபுரங்கள் தானே பார்த்திருப்பீர்கள்..ஆனால் இங்கு கண்கவர் சிலைகள் ஆயிரமாயிரம்...

அத்தனையும் பக்தர்கள் வேண்டுதலுக்காய் வைத்தவை...திருமண ஜோடிகள்...காவலர்கள்...நீதிபதிகள்...மருத்துவர்கள்...பொறியாளர்கள்...என தங்கள் வேண்டுதல்களுக்கு ஏற்றார்போல் பக்தர்கள் சிலைகளை வடிவமைத்து கோயிலில் வைத்துள்ளனர்...

இத்தனை சிலைகள் இருக்கும்போதே தெரியவில்லையா எவ்வளவு சக்தி வாய்ந்த கடவுள் நம் அழகு முத்தையனார் என்பது...

இத்தனை சிலைகளுக்கு மத்தியில் இதோ நடுநாயகமாய் க்ளாப் போர்டுடன் நின்றிருக்கிறதே இந்த சிலை யாருடையது என தெரியுமா?...

ரேடியோ ஜாக்கியாக அறிமுகமாகி..திரைத்துறையில் நடிகராகக் களமிறங்கி...ஹீரோவாகவும்...கிரிக்கெட் வர்ணனையாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் நம் ஆர்.ஜே.பாலாஜியுடையது தான்...

தானே எழுதி இயக்கி நயன்தாராவுடன் நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படத்தில் இருந்தே தெரிந்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி தீவிர கடவுள் பக்தி கொண்டவர் என்பது...

இயக்குநராக தான் எடுக்கும் படம் வெற்றி பெற வேண்டும் என்ற தன் வேண்டுதலை அழகு முத்தையனார் நிறைவேற்றி விட்ட காரணத்தால் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக ஆர்.ஜே.பாலாஜி இயக்குநரைப் பிரதிபலிக்கும் வகையில் சிலை வடிவமைத்து வைத்துள்ளார்...



Next Story

மேலும் செய்திகள்