ரீ ரிலீஸ் செய்யப்பட்ட `தளபதி' - மகிழ்ச்சியின் உச்சத்தில் ரஜினி ரசிகர்கள்
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட 'தளபதி' படத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். கடந்த 1991-ம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்த ‘தளபதி திரைப்படம் ரஜினி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் ‘க்ளாசிக் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி படம் 150-க்கும் மேலான திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. நேற்று இரவு சென்னை ரோகிணி திரையரங்கில் வெளியான தளபதி படத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
Next Story