கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே பெண் பாடகி - “எவர்கிரீன் நைட்டிங்கேல்“ பி.சுசீலாவின் பிறந்த நாள் இன்று

x

இளம் வயதிலேயே சென்னை வானொலி மூலம் தன் குரலை ஒலிக்கத் தொடங்கி, பின் மனதை வருடும் குரலாக மாறி மனதில் நீங்கா இடம் பிடித்த பாடகி பி.சுசீலாவின் பிறந்தநாள் இன்று..

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என மொழிகள் பல கடந்து முன்னணி பாடகியாக வலம் வரும் சுசீலா, தேசிய விருதை வென்ற முதல் பெண் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது....

1960, 70களில், தன் குரல் இடம்பெறாத தமிழ் படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு கோலோச்சிய சுசீலா, விஸ்வநாதன், ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் என அந்த காலக்கட்ட இசையமைப்பாளர்கள் தொடங்கி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் வரை தற்போதும் மக்களின் பேவரைட்டாக இருந்து வருகிறார்..

5 முறை தேசிய விருது, 3 முறை தமிழக அரசின் விருது, 7 முறை ஆந்திர அரசின் விருது மற்றும் 2 முறை கேரள அரசின் விருதுகளை வாங்கி குவித்திருக்கும் சுசீலா, மத்திய அரசு சார்பில் பத்மபூஷன் விருதும் வழங்கி கெளரவிக்கவும் பட்டிருக்கிறார்..

பல மொழிகளில் பல்லாயிரக் கணக்கான பாடல்களை பாடியிருக்கும் சுசீலா, இது தவிர 17,695 பாடல்களைப் தனியாக பாடிய கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஒரே பின்னணி பாடகி என்ற சாதனையைப் படைத்திருப்பது நினைவு கூறத்தக்கது..


Next Story

மேலும் செய்திகள்