பார்வதி நாயருக்கு திருமணம் - திரையுலகம் வாழ்த்து
நடிகை பார்வதி நாயர், ஆஷ்ரித் என்பவரை கரம்பிடித்தார்.
தமிழில் ‘உத்தம வில்லன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். விஜய் நடிப்பில் வெளியான 'கோட்’ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் திருவான்மியூரில் திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதிக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Next Story