வெளியானதும் சர்ச்சையில் சிக்கிய SK-வின் 'பராசக்தி' - ஷாக் கொடுத்த விஜய் ஆண்டனி
சிவகார்த்திகேயனின் 25-வது படத்திற்கு 'பராசக்தி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் ஆண்டனியின் 25-வது படத்திற்கும் 'பராசக்தி' என்ற தலைப்பு வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் பராசக்தி டைட்டில் சர்ச்சை தொடர்பாக, எக்ஸ் தளத்தில் நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார். அதில் தனது 25-வது படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாவதாகவும், தமிழில் 'சக்தித்திருமகன்' என்ற தலைப்பு வைக்கப்பட்ட நிலையில், தெலுங்கில் 'பராசக்தி' என்ற தலைப்பு வைத்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக கடந்தாண்டு பராசக்தி தலைப்பை தெலுங்கில் பதிவுசெய்த சான்றிதழையும் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
Next Story