நடிகை நயன்தாராவின் நெத்தியடி பேச்சு - யாரும் எதிர்பாரா சரவெடி

x

யார் கீழ்த்தரமாக பேசினாலும், தவறாக நடந்து கொண்டாலும் எதை பற்றியும் கவலைப்படக்கூடாது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையில் நம்புகிற இரண்டு விஷயங்கள் உள்ளதாக தெரிவித்த நயன்தாரா, தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் இருந்தால் போதும் என்றார்.

எவ்வளவு நடந்தாலும், யார் கீழே இறக்க நினைத்தாலும், இந்த இரண்டு விஷயங்களை விட்டுவிடக்கூடாது என்று கூறினார்.

இதை கடைப்பிடித்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும் என்ற அவர், நம் மீது தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் வேறு எந்த விஷயமும் கிடையாது என்று தெரிவித்தார்.

யார் என்ன சொன்னாலும், எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும், தவறாக நடந்து கொண்டாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், உண்மையாக தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றும், அப்போது தான் தன்னம்பிக்கை வரும் என்றும் கூறினார்.

உண்மையும், உழைப்பும் உயிர் இருக்கும் வரை இருந்தால் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும் என்று நயன்தாரா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்