மன்னிப்பு கேட்ட நடிகர் சூர்யா -வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?
மும்பையில் நடைபெற்ற கங்குவா திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில், ஊடகவியலாளர்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தி மொழியில் கங்குவா படத்தை ப்ரோமோஷன் செய்வதற்கான, சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த விழாவிற்கு சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் காலதாமதமாக சென்றுள்ளனர். இதனால் கடும் அதிருப்தியடைந்த பத்திரிகையாளர் ஒருவர், காலதாமதமாக வருவது நியாயமா என சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் இருந்து வந்ததால் காலதாமதமாகி விட்டது எனக்கூறி, விழா மேடையிலேயே பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களிடம் சூர்யா மன்னிப்பு கேட்டார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story