இந்த வார இறுதியில் 12 திரைப்படங்கள் வெளியீடு...
கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் இந்த ஆண்டின் கடைசி வாரம் என்பதால் விடுமுறையை கணக்கிட்டு
இந்த வார இறுதியில் 12 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன...
vovt
எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள அலங்கு, ஷியாம் பிரவீன் இயக்கத்தில் சரத்குமார் நாயகனாக நடித்துள்ள ஸ்மைல் மேன், தன் மகன் உமாபதி தயாரிப்பில் தம்பி ராமையா ஹீரோவாக நடித்துள்ள ராஜாகிளி ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன... அதேபோல்
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ள திரு மாணிக்கம், நிதின் இயக்கி எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ள கூரனும் இந்த வார இறுதியில் தான் வெளியாகிறது... மலையாள நடிகர் மோகன்லால் இயக்கி நடித்து லிடியன் நாதஸ்வரம் இசையமைத்துள்ள பேன்டசி திரைப்படமான பரோஸ்,
ரெபா மோனிகா ஜான் நடித்த மழையில் நனைகிறேன் மற்றும் இது உனக்கு தேவையா, நெஞ்சு பொறுக்குதில்லையே, பீமா சிற்றுண்டி, கிச்சா சுதீப் நடித்த மேக்ஸ் மற்றும் வாகை உள்ளிட்ட அனைத்து படங்களையும் சேர்த்து இந்த வாரம் 12 படங்கள் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளன. ஏற்கனவே திரையரங்குகளில் புஷ்பா 2 விடுதலை 2 ,முபாஷா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று ஓடி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.