ஸ்டார் நடிகர் குடும்பத்தில் அப்பா - மகன் மோதல்... அதிர்ச்சியில் திரையுலகம்
#mohanbabu
ஸ்டார் நடிகர் குடும்பத்தில் அப்பா - மகன் மோதல்... அதிர்ச்சியில் திரையுலகம்
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது இளைய மகன் மனோஜ் மஞ்சுக்கும் சொத்து தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக மனோஜ் மஞ்சு குற்றம் சாட்டியுள்ளார். இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம்
பேசிய மனோஜ் மஞ்சு, தான் சொத்துக்காகவோ, பணத்துக்காகவோ சண்டை போடவில்லை என்றும், இது சண்டை அல்ல, சுயமரியாதை பற்றிய பிரச்சனை என்றார். தன் குடும்பம் மற்றும் தன் குழந்தையின் பாதுகாப்பிற்காக, நீதி கிடைக்கும் வரை அனைவரையும் சந்திப்பேன் எனக் கூறியுள்ளார்.
Next Story