பிறந்தநாளில் பாசிமணி விற்கும் பெண்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட SK

x

மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.

தனது பிறந்தநாளையொட்டி, கோயிலுக்கு வேட்டி- சட்டை அணிந்து தனது மனைவியுடன் வந்த அவர், அங்குள்ள கருடாழ்வார் சன்னதியில் பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்தார். பிறகு தலசயனப் பெருமாள், நிலமங்கை தாயார் சன்னதியில் வழிபட்டார். இதனிடையே கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பாசிமணி விற்கும் நரிக்குறவ சமூக பெண்கள் சிவகார்த்திகேயனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்