"டோன்ட் டச்" - சிறுமி பாலியல் வழக்கு குறித்து நடிகர் பாலா கருத்து
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு "குட் டச், பேட் டச்" என்று சொல்வதைப் போல "டோன்ட் டச்" என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என நகைச்சுவை நடிகர் பாலா தெரிவித்துள்ளார்... சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மிமிக்ரி செய்து மாணவர்களை மகிழ்வித்தார்... தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலா, புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கவலை தெரிவித்ததுடன், குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டார். அத்துடன் நடிகர் அஜித்தின் உடல்நலன் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கும் பாலா பதிலளித்தார்.
Next Story