பாலியல் சர்ச்சையில் சிக்கினால் இனி தடம் தெரியாமல் அழிவுதான்.. நடிகர்களை நடுங்கவிடும் ஓர் முடிவு
ஹேமா கமிட்டியை தொடர்ந்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்கம்.. என்ன சொல்லி இருக்கிறார்கள்? பார்க்கலாம் விரிவாக..
கேரள திரையுலக நட்சத்திரங்களை அதிர வைத்த ஹேமா கமிட்டி கேரள திரையுலக பிரபலங்களை காவல் நிலையத்திற்கும் நீதி மன்றத்திற்கும் ஓட வைத்திருக்கும் ஹேமா கமிட்டியின் அறிக்கை விவகாரம் அங்கு ஓய்ந்தபாடில்லை...
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில திரையுலகிலும் முன்னணி நடிகைகள் பலர் பாலியல் தொல்லை தொடர்பாக குரல் கொடுக்க இந்த பிரச்சினை "பான் இந்தியா" அளவில் சென்று கொண்டிருக்கிறது இந்த நிலையில் தமிழ் திரையுலக நடிகைகள் ராதிகா, கஸ்தூரி
உட்பட பலர் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து அதிரடி கருத்துக்களை வெளியிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக நடிகர் விஷாலின் பேச்சும் கொந்தளிப்பை கிளப்பியது..
தமிழ் திரையுலக நடிகைகள் பாதுகாப்பு குறித்த கூட்டம் இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. இதில் சீனியர் நடிகைகளான சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.
பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்களுக்கு ஐந்து ஆண்டு தடை
இந்த கூட்டத்தில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது விசாரணை நடத்தி உண்மை வெளிவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நடிகர் நடிப்பதற்கு ஐந்து ஆண்டு தடை விதிக்கப்படுவதாக அதிரடி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி மற்றும் இ மெயில் மூலம் புகார் அளிக்கலாம்.. ஆனால் ஊடகங்களில் புகார் குறித்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நடிகர்களுக்கு முதலில் எச்சரிக்கையும், பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்
என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.
பாலியல் பிரச்சினைகளை களைய எடுக்கப்படும் நடவடிக்கைகள் வரும் காலத்தில் நடிகைகளை நிம்மதி பெரு மூச்சு விட வைக்க வேண்டும் என்பதே பல நடிகைகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.