சிறுநீரக கோளாறு - பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சிகிச்சை
- சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமான பவர்ஸ்டார் சீனிவாசன், பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். முன்தினம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென்று அவரது உடல்நிலை மோசமானதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு வாரம் சிகிச்சைப் பெறுமாறு பவர் ஸ்டார் சீனிவாசனிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story