மதத்தின் பெயரால் இளம்பாடகி மீது கடும் அவதூறுகள்...

x

அமீர்கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற பாலிவுட் படம் பார்த்திருப்போம்...

பாடகியாக வேண்டும் என்ற கனவோடு சாதிக்கத் துடிக்கும் இஸ்லாமிய சிறுமி...தன் தந்தையின் கண்மூடித் தனமான கண்டிப்பால் அடையாளத்தை மறைத்து பாடல் பாடி...சமூக வலைதளத்தில் சீக்ரெட் சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார்...

படத்தில் நாயகிக்கு எதிரி தந்தை...ஆனால் நாம் இப்போது பார்க்கப் போகும் இந்த உண்மை சம்பவத்தில் நாயகியைக் குடும்பம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது...

ஆனால் இஸ்லாமிய பெண் என்ற ஒரே காரணத்தால் அப்பெண் தான் பிறந்த மதத்தைச் சேர்ந்தவர்களாலேயே பல இழிச்சொல்லுக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாகிறாள்...

ஆனால் எதுவும் நம் நாயகியின் ஓட்டத்தைத் தடுத்து விடவில்லை...


இந்த ஆத்மார்த்தமான குரலுக்குச் சொந்தக்காரர்தான் கேரளத்தைச் சேர்ந்த இளம்பாடகி அன்ஷா ஜாகிர்...


சிறுவயது முதலே நம் அன்ஷாவுக்கு இசையென்றால் கொள்ளைப் பிரியம்...

அன்ஷாவின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடவில்லை குடும்பத்தினர்...

இயல்பாகவே பெண்கள் என்றால் வீட்டில் கட்டுப்பாடுகள் இருக்கும்...அதிலும் இஸ்லாமிய பெண்கள் எனும்போது ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கும்...

ஆனால் அன்ஷாவின் திறமை 4 சுவர்களுக்குள் முடங்கி விடக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளனர் அவரது பெற்றோர்...


தான் பாடும் பாடல்களை அன்ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த போது அனைவரும் வாயடைத்துப் போய் விட்டனர்... இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு திறமையா என்று...

ஆனால்...அதே சமயம்...கடவுளின் பெயரால் சாபமெல்லாம் விட்டார்கள் கமெண்ட் பாக்சில்...

எதிர்மறை கருத்துகளைக் கண்டு களைத்து விடவில்லை அன்ஷா...எதிர்நீச்சல் போட்டு தன்னைத் தூற்றியவர்கள் முன்பாகவே மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறார்...

சொந்த மாநிலம் கேரளா என்ற போதும்...தமிழ் பாடல்களைப் பாடுகையில் அன்ஷாவின் உச்சரிப்பை மெச்சாதவர்களே இல்லை...


தூற்றுபவர்கள் தூற்றிக் கொண்டே தான் இருப்பார்கள்...அவர்களுக்குத் தெரிந்தது அது மட்டுமே...

ஆனால் அபார திறமையால் எதிர்காலத்தில் அன்ஷா இந்தியாவே கொண்டாடும் மிகப்பெரிய பாடகியாய் வலம் வருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை...


Next Story

மேலும் செய்திகள்