பயிற்றிப் பல கல்வி தந்த ஆசான் கே.பாலசந்தர்“-கமல் புகழாரம்
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் நினைவு நாளை ஒட்டி நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்... கமலை திரையுலகில் நாயகனாக அறிமுகப்படுத்தியவர் கே.பாலச்சந்தர் தான். இந்நிலையில், “எத்தனை படங்கள்...அத்தனையும் பாடங்கள்...“ என்று சிலாகித்துள்ள கமல், பள்ளியாகவும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்து பயிற்றிப் பல கல்வி தந்த ஆசான் கே.பாலசந்தர் என்று புகழாரம் சூட்டி,
அவரிடம் பயின்றவை என்றும் தன் நினைவில் நிற்கும்.... தன்னை வழி நடத்தும்... அவர் புகழ் நிலைக்கும்....“ என மெய்சிலிர்த்துள்ளார்...
Next Story