தெலுங்கர்களை ஆபாசமாக பேசிவிட்டு; `தெலங்கானா'வில் பதுங்கிய கஸ்தூரி ஒளித்து வைத்த பிரடியூசர் யார்..?

x

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகை கஸ்தூரியை, சென்னை போலீசார் கைது செய்தது எப்படி? எனப் பார்க்கலாம்..விரிவாக..

தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில், தேடப்பட்டு வந்த நடிகை கஸ்தூரியை சென்னை போலீசார் ஹைதராபாத்தில் ஒரு தயாரிப்பாளரின் வீட்டில் வைத்துதான் சுற்றிவளைத்து இப்படி கைது செய்திருக்கிறார்கள்..

கடந்த 3-ம் தேதி சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த சோஷியல் மீடியா உள்ளிட்டவைகளில் எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து அவர் தெலுங்கு மக்கள் குறித்து தவறாக பேசியிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தும் பயனில்லை.. தொடர்ந்து, அவரது பேச்சிற்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

கஸ்தூரியின் பேச்சு குறித்து கோயம்பேடு போலீசிலும், பிறகு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல, நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை திருநகர் போலீசில், அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவும் செய்தனர்.

இதையடுத்து விசாரணைக்கும், கைது நடவடிக்கைக்கும் பயந்த கஸ்தூரி, வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகினார். அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகிய நிலையில், தமிழ்நாடு முழுவதும் அவரை போலீசார், தீவிரமாக வலைவீசித் தேடிவந்தனர்..

பிறகு பதறிப்போய், தலைமறைவாக இருந்துகொண்டே, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடிகை கஸ்தூரி தனக்கு முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, விமர்சனங்களுடன் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்..

இந்த சூழலில் தான், ஹைதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் நடிகை கஸ்தூரி பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சென்னை போலீஸ் அங்கு விரைந்தனர். அங்கு, வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட கஸ்தூரி, கதவை நீண்ட நேரம் திறக்காமல் உள்ளே மறைந்தே இருந்துள்ளார்.

பிறகு, இப்போ கதவை நீங்களா திறக்குறீங்களா? இல்லைனா.. ஹைதராபாத் போலீஸ் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வரட்டுமா? எனக் கூறியதை அடுத்தே, பதட்டத்துடன் வெளியே வந்த கஸ்தூரி கைது செய்யப்பட்டிருக்கிறார்..


Next Story

மேலும் செய்திகள்