சூர்யாவின் கங்குவா படத்துக்கு தடை கோரி வழக்கு.. - உயர்நீதிமன்றம் அதிரடி

x

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், முந்தைய பட தயாரிப்புக்காக வழங்கிய 55 கோடி ரூபாயை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்படுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. தொகையை திருப்பி தராமல் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. வழக்கு விசாரணையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில் 18 கோடியை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்தி விட்டதால், தங்கலான் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட ஆட்சேபனை இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதனையடுத்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில், மீதி தொகை நாளைக்குள் வழங்கப்படும் என உறுதி அளித்தது. இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, பாக்கித் தொகையை செலுத்தியது குறித்து தெரிவிக்கும் வகையில் வழக்கு விசாரணையை நாளை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார். நாளை பணம் செலுத்தப்படும் பட்சத்தில், கங்குவா படம் திரைக்கு வர எந்த தடையும் இருக்காது எனத் தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்