ஏ.ஐ தொழில் நுட்பம் கற்க அமெரிக்க செல்லும் கமல்ஹாசன்

x

தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய நடிகர் கமல்ஹாசன்... இம்மாத இறுதியில் ஏ.ஐ தொழில் நுட்பம் பற்றி கற்க அமெரிக்க செல்ல இருக்கிறார். இது குறித்தான ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம் விரிவாகஏ.ஐ. தொழில்நுட்பம் பற்றிய படிப்பை மேற்கொள்ள நடப்பு மாதத்தின் இறுதியில் அமெரிக்கா செல்ல இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்....

திரையுலகில் 64 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருகிறார் கமல்ஹாசன்... புதுமைகளும், தொழில்நுட்பங்களும் இவரின் படங்களில் தனித்து தெரியும்...

விக்ரம்" - கணினியில் பதிவான முதல் தமிழ் படம்

தமிழ் சினிமாவிற்கு கணினியையும், மென்பொருள் மூலம் திரைக்கதை எழுதும் நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியதே கமல்ஹாசன்தான்...

1986 இல் கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம்தான் கணினியில் பதிவான முதல் தமிழ் திரைப்படம்.

தேவர் மகன்" - மென்பொருள் தொழில்நுட்பத்தில் திரைக்கதை

இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்த கமல்ஹாசன், பின், தேவர் மகன் திரைப்படத்திற்கான திரைக்கதையை மென்பொருள் தொழில்நுட்பத்தில் எழுதி வியக்க வைத்திருந்தார்

மகாநதி" - அவிட் மென்பொருள் தொழில் நுட்பத்தில் எடிட்டிங்

தொடர்ந்து, இந்திய சினிமா வரலாற்றிலே முதல் முறையாக, அவிட் மென்பொருள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மகாநதி திரைப்படத்தை கமல்ஹாசன் எடிட் செய்திருந்தது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருந்தது...

பின், குருதிப்புனலில், டால்பி ஸ்டீரியோ சவுண்ட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது, இந்தியன் திரைப்படத்தில் செயற்கை மேக்கப் மூலம் சேனாபதி வேடம் தரித்தது, கோரக் காட்சிகளை தணிக்கை குழு நீக்காமலிருக்க ஆளவந்தான் திரைப்படத்தில் அனிமேஷன் காட்சி மற்றும் மோஷன் ரிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது என சொல்லிக் கொண்டே போகலாம்...

விருமாண்டி" - நேரடி ஒலிப்பதிவு முறையில் படப்பிடிப்பு

2013ல் பல சர்ச்சைகளை கடந்து வெளியான 'விஸ்வரூபம்' திரைப்படம்... ஆரோ 3டி ஒலி தொழில்நுட்பத்தில் வெளியான முதல் இந்திய திரைப்படம்...

இப்படி தன் இந்திய சினிமாவின் தொழில் நுட்ப களஞ்சியமாக வலம் வந்த கமல்ஹாசன், தற்போதையை உலகை ஆக்கிரமித்து வரும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை ஒரு கை பார்க்க அமெரிக்க செல்ல இருக்கிறார்...

ஐம்பது நாட்களுக்கு அங்கேயே தங்கி ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்பான படிப்பை மேற்கொள்ள இருக்கும் கமல்ஹாசன், டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இனி கமல்ஹாசன் கைவண்ணத்தில் தமிழ் சினிமாவில் AI யும் கலந்து கட்டி ரசிகர்களை குஷிப்படுத்த போகிறது...


Next Story

மேலும் செய்திகள்