ஜோதிகா விட்ட வார்த்தை.. அவருக்கு எதிராகவே திரும்பியது..கணவர் சூர்யாவை வைத்தே விழுந்த மரண அடி
கங்குவா திரை விமர்சனம் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கும் நடிகை ஜோதிகாவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வரும் சூழலில் இணையவாசிகள் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகைகளின் அடுத்தடுத்த ஸ்டேட்மெண்ட்டுகளால் சலசலப்பில் தகித்து வருகிறது தமிழ் சினிமா.. முதலில் துர்கா.. அப்புறம் கங்கா... என சந்திரமுகி படத்தின் சீனை வைத்து களைகட்டியிருக்கிறது இணையம்...
இந்த வகையில், நடிகை நயன்தாராவுக்கு அடுத்து இன்ஸ்டா போஸ்ட் மூலம் வெகுண்டெழுந்திருக்கிறார் நடிகை ஜோதிகா..
அத்தனையும் தன் கணவர் சூர்யாவுக்காக, அவர் நடித்த கங்குவா படத்திற்காக..
ஆனால், அறிக்கையின் தொடக்கத்திலே இதை நான் சூர்யாவின் மனைவியாக சொல்லவில்லை, ஒரு நடிகையாக, சினிமா காதலராக சொல்வதாக ஆரம்பித்திருக்கிறார்...
தொடர்ந்து, கங்குவா திரைப்படம் மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்ததாகவும், சூர்யாவின் நடிப்பாலும், சினிமாவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் சூர்யாவின் கனவுகளாலும் தான் பெருமை கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.. அத்தனையும் கங்குவா திரைப்படங்களுக்கான நெகடிவ் ரிவ்யூக்களுக்கு மத்தியில்..
கூடவே, கங்குவா திரைப்படத்தின் முதல் 30 நிமிடங்கள் கதைக்கு தொடர்பேயில்லை எனவும், இரைச்சல் சத்தங்களால் படத்தை பார்க்க முடியவில்லை எனவும், கங்குவாவை ஆட்டம் காணச் செய்த விமர்சனங்களை தானும் ஏற்கும் வகையில் உள்ளதென குறிப்பிட்டிருக்கிறார்..
இதோடு இல்லாமல், இதுபோன்ற குறைகளும், தவறுகளும் பெருவாரியான இந்திய திரைப்படங்களில் சகஜம்தானே எனவும் பதிவிட்டிருக்கிறார்.
இந்நிலையில், கங்குவாவை மட்டும் குறிவைத்து வைக்கப்பட்டிருக்கும் இத்தகைய நெகடிவ் விமர்சனங்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்..
மேலும், பெண்களை கேலி செய்தும், இரட்டை அர்த்த வசனங்களால் குறிப்பிட்டு பேசும் வகையிலும், ஏற்றுக் கொள்ள முடியாத சண்டைக்காட்சிகள் கொண்ட படங்களையும் ஏற்றுக் கொள்பவர்கள்... கங்குவாவை மட்டும் இந்தளவுக்கு விமர்சிப்பது ஏன் என கேள்வியெழுப்பியிருக்கிறார்..
இந்த பதிவுதான், கூட்டத்தில் பச்சை சட்டைக்காரன் எஸ் ஆகுறான் பாணியில் நயன்தாராவின் அறிக்கையால் தப்பித்த கங்குவாவை மீண்டும் பிடித்து ட்ரோல் செய்து வருகின்றனர் இணையவாசிகள்..
முதலில், சூர்யாவின் நடிப்பை யாரும் குறை கூறவில்லை என்கின்றனர்... ஜோதிகா குறிப்பிட்டது போலவே படத்தின் முதல் 30 நிமிடங்கள் சரியில்லை எனவும், இரைச்சல் சத்தங்களால் தங்களின் காதுகள் கிழிந்ததாகவும் தாங்கள் தெரிவித்திருக்கும் நிலையில், இதற்கு ஏன் இவ்வளவு கோபம் என கேள்வி எழுப்புகின்றனர்..
கூடவே, சூரரைப்போற்றையும், ஜெய்பீமையும் கொண்டாடி தீர்க்கவில்லையா என சூர்யாவை மட்டும் குறி வைத்து விமர்சிப்பதாக பேசியதற்கு பதிலளித்திருக்கின்றனர்..
குறிப்பாக கங்குவாவை குறை கூறினால்... அது குறித்து பேசாமல், மற்ற திரைப்படங்களில் இதுபோன்ற குறைகள் இல்லையா? என ஜோதிகா பேசுவது அவரின் பக்குவமின்மையை காட்டுவதாக விமர்சித்திருக்கின்றனர்...
அதிலும் குறிப்பாக, பெண்களை கேலி செய்தும், இரட்டை அர்த்த வசனங்களால் குறிப்பிட்டு பேசும் வகையிலும், ஏற்றுக் கொள்ள முடியாத சண்டைக்காட்சிள் கொண்ட படங்களையும் ஏற்றுக் கொள்பவர்கள் கங்குவாவை மட்டும் இந்தளவுக்கு விமர்சிப்பது ஏன் என்பதற்கு காட்டமாகவே பதிலளித்திருக்கின்றனர்..
கங்குவாவின் முதல் 30 நிமிடங்களில் படத்தின் ஹீரோயினை யோகிபாபுவும், சூர்யாவும் அப்படித்தானே பேசி காமெடி செய்திருந்தனர் எனவும், படத்தின் க்ளைமேக்ஸில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தை.. சூர்யா ஃபுட் போர்ட் அடிப்பதை 2024-இல் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் எனவும் விமர்சித்திருப்பது பேசு பொருளாகி இருக்கிறது...