ஜானி மாஸ்டர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
பிரபல நடன இயக்குநன் ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், என்ன நடந்தது என கடவுளுக்கு தெரியும் என்றும் கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடன இயக்குநர் ஜானிமாஸ்டர், தனக்கு கடந்த ஐந்து வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது நடனக்குழுவில் இருந்த 21 வயது இளம்பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டர், ஜாமினில் வெளியே வந்தார். அவர் மீது தற்போது நீதிமன்றத்தில் சைபராபாத் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜானி மாஸ்டர், “இன்று நான் குற்றம் சாட்டப்பட்டவன் மட்டுமே.. நான் எந்தத் தவறும் செய்யவில்லை... என்ன நடந்தது என்று என் மனதிற்கும், கடவுளுக்கும் தெரியும்“ என தெரிவித்துள்ளார்.