ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மகள்..!

x

நடிகர் ஜெயம் ரவியின் 34-வது படத்திற்கான பூஜை, சென்னையில் நடைபெற்றது. "டாடா" பட இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கிறார். வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ள இந்தப் படத்தில், சக்தி, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திங்கள்கிழமை தொடங்கும் என்று கூறப்படுகிறது.

நடிகை த்ரிஷா சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவு பெற்றதை, நடிகர் சூர்யா-45 படக்குழுவினருடன் கொண்டாடினார். கங்குவா படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தை நடித்து முடித்துள்ள நடிகர் சூர்யா, நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45வது படத்தில் நடித்து வருகிறார். டிசம்பர் 13-ம் தேதி தான் த்ரிஷா நாயகியாக நடித்த முதல் படமான மௌனம் பேசியதே திரையில் வெளியானது. இந்த நிலையில் நடிகை திரிஷா நடிக்க வந்து 22 வருடங்கள் நிறைவு செய்ததை அடுத்து, சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை திரிஷா கேக் வெட்டி கொண்டாடினார்.


Next Story

மேலும் செய்திகள்