"மறுபிறவி இருந்தால்.." - உருக்கமாக பேசிய ஜாக்கி சான்
மறுபிறவி இருந்தால் சூப்பர்மேன் ஆகி அன்பையும் அமைதியையும் உலகம் முழுக்க பரப்புவேன் என்று நடிகர் ஜாக்கி சான் கூறியுள்ளார்.
ஸ்டான்லி டோங் இயக்கத்தில், ஜாக்கி சான், லே ஜாங், குல்நெசர் பெக்ஸ்டியர், ஆரிஃப் ரகுமான் மற்றும் பலர் நடிப்பில் சீன மொழியில் 'ஏ லெஜன்ட்' என்ற பெயரில் கடந்த ஆண்டு படம் வெளியானது. இந்நிலையில், தமிழில் 'விஜயபுரி வீரன்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு இந்தப் படம் வெளியாகி உள்ளது. ஜாக்கி சான் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த படம் தமிழில் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. இந்தப் படம் சரித்திர காலத்தையும், இன்றைய காலத்தையும் கலந்து எடுக்கப்பட்ட ஒரு படம் ஆகும். படம் குறித்து ஜாக்கி சான் பேசியதை தமிழில் டப் செய்து படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Next Story