இளையராஜா முன்னிலையில் காதலியை கரம் பிடித்த தெருக்குரல் அறிவு.. போட்டோஸ் வைரல்

x

பின்னணி பாடகராக அறிமுகமான தெருக்குரல் அறிவு, ராப் பாடல்களை பாடி பிரபலமானவர். மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி ரைடு, எஞ்சாயி எஞ்சாமி உள்ளிட்ட பல பாடல்களை எழுதி பாடியுள்ளார். அண்மையில் கோல்டன் ஸ்பேரோ பாடலில் கூட ராப் பகுதியை பாடியிருந்தார். மேலும் பல திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். இது மட்டுமன்றி சுயாதீன பாடல்களால் சமூக வலைத்தளங்களில் பரீட்சையமான இவர், தனது நீண்ட நாள் காதலியான கல்பனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழாவில், இசையமைப்பாளர் இளையராஜா, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனும் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய பாடகர் அறிவு, பெரியாரின் சட்டத்தின் வழியாக சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்