ஹனி ரோஸ் விவகாரம்... பாபி செம்மனூர் கைது | Honey Rose
மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ஹனி ரோஸ், தமிழில் 'சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தன்னை குறித்து வசதி படைத்த ஒருவர் தேவையில்லாமல் பொதுவெளியில் களங்கப்படுத்தி வருவதாக அண்மையில் குற்றம்சாட்டியது அதிர்வலைகளை உண்டாக்கியது. இதுதொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் டிஜிபியிடமும் ஹனிரோஸ் புகார் அளித்திருந்த நிலையில், புகாருக்குள்ளான பிரபல நகைக்கடை தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகளில் கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, பாபி முன் ஜாமின் பெற முயன்றதாக தகவல் வெளியான நிலையில், வயநாடு எஸ்டேட்டில் வைத்து பாபியை போலீசார் கைது செய்தனர். கோவையில் நடிகை ஹன்சிகா பங்கேற்கும் நகைக்கடை திறப்பு விழாவில் செல்லும் வழியில் அவரை கைது செய்த போலீசார் கொச்சி அழைத்து சென்றனர். தொடர்ந்து, முதல்வருக்கும், போலீசாருக்கும் ஹனிரோஸ் நன்றி தெரிவித்தார்.