ரசிகர்களை பிராங்க் செய்த பாடகர் ஹரிஹரன்...
கேட்போரை ஈர்க்கும் காந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் பாடகர் ஹரிஹரன்...
இரவா பகலா குளிரா வெயிலா...
ஹரிஹரனின் வசீகரமான குரலில் ஒலித்த பாடல்கள் அத்தனையும் ஹிட் ரகம்...
கொஞ்ச நாள் பொறு தலைவா - ஆசை
90ஸ் கிட்ஸின் ஃபேவரிட் பாடகர்களில் ஒருவரான ஹரிஹரன்...பாடகராக 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்...
அவள் வருவாளா...
ரோஜா திரைப்படத்தில் தமிழா தமிழா பாடல் மூலம் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த ஹரிஹரன், இளையராஜா, ரஹ்மான், தேவா, வித்யாசாகர், சிற்பி போன்ற இசை ஜாம்பவான்கள் இசையில் அசர வைக்கும் பாடல்களைத் தந்துள்ளார்..
திரைப்படங்களில் மட்டுமல்லாது தனியே ஹரிஹரனின் இசை நிகழ்ச்சிகளுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உன்டு...
மேடைகளில் வழக்கமான பாணியில் அல்லாமல் வித்தியாசமாக பாடி ரசிகர்களை குதூகலப்படுத்துவார்...
இசை, வரி என்பதைத் தாண்டி பாடல்களை ஹரிஹரன் குரலில் கேட்பது தனி சுகமே...
இந்நிலையில், சமீபத்தில் கேரளாவில் நடந்த இசைநிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஹரிஹரனை இசை கலைஞர் மேடைக்கு அழைத்தார்...
வயது முதிர்ந்த தோற்றத்தில் தள்ளாடி தள்ளாடி மேடைக்கு வந்த பாடகர் ஹரிஹரன்...பேசுவதற்கே மிகவும் சிரமப்படுவதைப் போல் தெரிந்தது...
பேசவே முடியவில்லை எனும்போது பாடுவாரா என அனைவரும் யோசிக்க...காதலுக்கு மரியாதை படத்தில் வரும் “என்னைத் தலாட்ட வருவாளோ“ பாடலை கஷ்டப்பட்டு பாட முயற்சித்தார்... ஆனால் முடியவில்லை...
அவரது தோற்றத்தைக் கண்டே அதிர்ந்து போன ரசிகர்கள்...அவரால் பாடமுடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...
அனைவரும் கவலையில் ஆழ்ந்திருக்க...திடீரென தனது பாணியில் அசத்தலாக பாடி ரசிகர்களைக் கட்டிப் போட்டு விட்டார்...
அப்போது தான் தெரிந்தது அது ஹரிஹரன் செய்த பிராங்க் என்பது...
ரசிகர்கள் ஆர்ப்பரித்து விட்டனர்...
அதே சமயம் ஹரிஹரனுக்கு என்ன தான் ஆனது?...அவரது உடல் நிலைக்கு ஒன்றும் இல்லையே எனவும் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்...
90ஸ் கிட்சின் ஆதர்ச நாயகனான ஹரிஹரன் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது..