``மனச்சோர்வில் இதுதான் எனக்கு சிகிச்சையாக இருந்தது'' - குஷ்பு-விடம் மனமுறுகிய சிவகார்த்திகேயன்
தன் தந்தை இறந்த போது மனச்சோர்வில் இருந்த தனக்கு பார்வையாளர்களின் கைதட்டல்களும் விசில்களும் தான் சிகிச்சையாக மாறியதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்...
கோவாவில் நடைபெற்று வரும் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை குஷ்பு சுந்தருடன் இணைந்து உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார் சிவகார்த்திகேயன். அப்போது பேசிய அவர், தமது தந்தையின் அகால மரணம் தனது வாழ்க்கையில் ஒரு சோர்வை ஏற்படுத்தியது என்றும், மனச்சோர்வில் தன் வேலையைச் செய்யத் துவங்கிய போது பார்வையாளர்களின் விசில்களும் கைதட்டல்களும் தான் சிகிச்சையாக மாறியதாக தெரிவித்தார்... தொடர்ந்து பேசிய குஷ்பு சிவகார்த்திகேயனின் திறமையை வெகுவாக பாராட்டினார்.
Next Story