பிறந்தநாளில் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற கங்கை அமரன்

x

77வது பிறந்தநாளை கொண்டாடும் திரைப்பட இயக்குனர் கங்கை அமரன் தனது சகோதரர் இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார். அதன் புகைப்படத்தை கங்கை அமரனின் மகன் இயக்குனர் வெங்கட் பிரபு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே என்ற பாடலை எழுதும் வாய்ப்பு கங்கை அமரனிற்கு கிடைத்தது. அதன் பிறகு பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் என அதிரடி காட்டிய கங்கை அமரன் 1982 ஆம் ஆண்டு கோழி கூவுது என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். 1989 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான கரகட்டாக்காரன் படம் பட்டித்தொட்டியெங்கும் பெரும் வெற்றியடைந்து, பல ஆண்டுகளாக தியேட்டரில் ஓடிய படம் என்ற சாதனையை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்