நடிகர் தனுஷை சுற்றிவரும் தொடர் சர்ச்சைகள்
தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான், நடிகர் தனுஷ்.
உருவ கேலிகளை கடந்து இந்த படத்தால் திரையில் தடம் பதித்தார் தனுஷ்..
திருடா திருடி, பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, அசுரன் போன்ற பல படங்களில் நடித்து டாப் நடிகர்களில் ஒருவராக மாறிய தனுஷ், படிப்படியாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார்..
நடிப்பதோடு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் எனப் பலதுறைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார், நடிகர் தனுஷ்.
ஆனால், எப்படி படிப்படியாக உயர்ந்தாரோ? அதே வேகத்தில்.. அவர் மீதான சர்ச்சைகளும் வளரத் தொடங்கின.
ஆரம்பத்தில், தனுஷிற்கும் - சிம்புவிற்கும் தான் போட்டி எனப் பேசப்பட்டது. அதற்கு ஏற்பவே, தங்களின் படங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி வசனங்களும் பேசினர்...
இதனிடையே பாடகியும் நடிகையுமான சுசித்ரா வெளியிட்ட சுச்சி லீக்ஸ் தான், தனுஷ் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தது.
இதைத்தொடர்ந்து, தனுஷின் படிக்காதவன் படத்தில் முதலில் காமெடியனாக வடிவேலு தான் நடிப்பதாக இருந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் வடிவேலுவிற்கும், தனுஷிற்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால், இந்த படத்தில் விவேக் நடித்திருந்தார் என கூறப்பட்டது.
பிறகு, ஹிட் அடித்த " 3 " படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஆகியோர் மிகவும் நெருக்கமாக நடித்ததும், சர்ச்சையானது..
இதே படத்தில் தான், சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை, தனுஷ் வெள்ளித்திரையில் அறிமுகம் செய்திருப்பார்..
பின்பு, சிவகார்த்திகேயனை வைத்தே, எதிர்நீச்சல் படத்தையும் தனுஷ் தயாரித்தார்.. தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு.. காட்பாதரே தனுஷ் தான் என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், ரெமோ பட விழாவில், என்னை வாழ விடுங்கள் என மேடையில் சிவகார்த்திகேயன் கதறி அழுதது சர்ச்சை ஆனது. இதில், சிவகார்த்திகேயன் அழுகைக்கு காரணம் தனுஷ் தான் என பரவலாக பேசப்பட்டது. ஒருகட்டத்தில் சிவகார்த்திகேயன் தனி வழியில் பயணித்து இப்போது சினிமாவின் முக்கிய நபராக மாறியிருக்கிறார்.
இப்படியாக.. இயக்குனர் விஜய் - அமலா பால் விவாகரத்துக்கும், பாடகர் விஜய் ஜேசுதாஸ் திருமண வாழ்க்கை முறிவுக்கும் நடிகர் தனுஷ் தான் காரணம் என இணையத்தில் தகவல் பரவியது.
ஒருகட்டத்தில், திரையுலகில் யார் விவாகரத்து பெற்றாலும்.. அதற்கு இவர் தான் காரணம் என கைகள் தனுஷை நோக்கியே நீண்டன....
ஆனால், இவை எதற்கும் தனுஷ் தரப்பில் பதில் ஏதும் வெளியாகவில்லை..
சுச்சி லீக்ஸ் விவகாரம், நடிகைகளுடனான நெருக்கம், நடிகர்கள் விவாகரத்து எனப் பல குற்றச்சாட்டுகள் தனுஷ் மீது சுமத்தப்பட்டாலும், இவை எவையுமே அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்டவர்களால் புகாராக தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று நடிகை நயன்தாரா எழுதிய கடிதம் தான் முதன் முதலில் வெளிப்படையாக தனுஷ் மீது புகாராக வெளி வந்துள்ளது.
'நயன்தாரா - பியாண்ட் தி பேரி டேல்' ஆவணப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், 3 செகன்ட் ஓடும் குறும்படத்திற்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடா? என்பன உள்ளிட்ட பல பகிரங்க குற்றச்சாட்டுகளை நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...