"தனுஷ், சிம்பு...இதுக்கு மேல பொறுக்க முடியாது.." - RK செல்வமணி வெளியிட்ட பரபர அறிக்கை
"தனுஷ், சிம்பு...இதுக்கு மேல பொறுக்க முடியாது.." - RK செல்வமணி வெளியிட்ட பரபர அறிக்கை
தயாரிப்பாளர் சங்கத்தினர் தங்களை எதிரி போன்ற பிம்பத்தை உருவாக்குவதாக, ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அனுப்பிய கடிதத்திற்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக, ஃபெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே செல்வமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் பிரச்சனைகளை பற்றி விவாதிக்காமல், ஃபெப்ஸி மீதே குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பது நியாயமா என்று கேள்வியெழுப்பி உள்ளார். தனுஷ், சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் மீது ரெட் கார்டு மற்றும் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள 300 பேருக்கும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்ற ஒப்பந்தங்களை தவிர மற்ற அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக செல்வமணி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது தலைவர் மற்றும் பெரும்பான்மையான செயற்குழு உறுப்பினர்கள் இல்லாமல், அவசர பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தி ஃபெப்சியை களங்கப்படுத்தி இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி மீதுள்ள நன்மதிப்பின் காரணமாக இதுவரை பொறுமை காத்து வந்ததாகவும், இனியும் தங்களால் பொறுத்துக் கொள்ள இயலாது என்றும் செல்வமணி தெரிவித்துள்ளார்.