தனுஷ் மீது பாய்ந்த நயன்தாராவுக்கு பேரிடி..எப்போதோ செய்த வினை கர்மாவாக மீண்டும்.. வெடிக்கும் பூகம்பம்
தனுஷ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய நயன் தாரா மீது இயக்குநர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யார் அவர் ? இதன் பின்னணி என்ன ? பார்க்கலாம் விரிவாக...
தனது திருமண ஆவணப்படத்தை வெளியிட, நானும் ரவுடி தான் படக் காட்சிகளை பயன்படுத்த ஒப்புதல் தராமல், தனிப்பட்ட வெறுப்பினால் 3 விநாடி வீடியோவுக்கு 10 கோடி ரூபாய் கேட்பதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார் நயன்...
அதே போல், தனுஷின் வீடியோ ஒன்றையே வெளியிட்டு தனுஷுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்...
இந்த விவகாரத்தில் நயனுக்கு சாதகமாக ஒரு புறம், ஆதரவு எழ...மற்றொரு புறம் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இந்நிலையில், நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் இயக்குநர் எஸ் எஸ் குமரன்...
தமிழ் திரைத்துறையில் பூ, களவாணி ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளரும், கேரள நாட்டிளம் பெண்களுடனே, தேநீர் விடுதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநருமான எஸ் எஸ் குமரன் நயன் தாராவுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்...
தனது படத்திற்காக வைத்திருந்த படத்தின் பெயரை விக்னேஷ் சிவன் தனது அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் எல்.ஐ.சி. படத்தை குறிப்பிட்டே அவர் கடிதம் எழுதியுள்ளார்..
இது தொடர்பாக அவர் வெளியிட்ட கடிதத்தில், மூன்று வினாடி காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தற்காக வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியதோடு, அதிகாரத் தன்மையுடன் அதே தலைப்பை விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், உன்னால் என்ன பண்ண முடியும் என்ற அதிகார நிலை தானே காரணமாக இருக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நயன் வெளியிட்ட கடிதத்தின் பாணியிலேயே, எந்தக் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல சொல்வீர்கள் என விமர்சித்துள்ளார்.
உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரதோடு நடந்துக் கொண்டு, என்னை மன உளைச்சலுக்கு ஆக்கியதற்காய் நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும் என சாடியுள்ளார்.
இப்பொழுது வரை அந்தத் தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் தன்னை பாதித்துக் கொண்டிருப்பதாக கூறிய அவர்,எந்தப் படைப்பாளியும் தன் படைப்பை பல காரணங்களோடும் பல பொருட்செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள்.
நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதியோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும் என அட்வைஸ் கொடுத்துள்ளார்.
நீங்கள் இங்கு எதையும் இலவசமாகச் செய்யவில்லை. எங்கள் படைப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்புலகத்திற்கு மிக மோசமான வழிக்காட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க என கடுமையாக விமர்சித்துள்ளார்..
இதே போல், தனுஷ் ரசிகர்கள் பலரும் தனுஷுக்கு ஆதரவாக பேசி வர, விவாதங்களால் சூடு பிடித்துள்ளது கோலிவுட் வட்டாரம்...