ஆண் உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி விதைப்பையை எரித்து சித்ரவதை ரசிகனை அணு அணுவாக சிதைத்த தர்ஷன் கண் குளிர பார்த்து ரசித்த பிரபல நடிகை

x

கன்னட நடிகர் தர்ஷன் வழக்கில் ரசிகர் கொல்லப்பட்ட விதம் தொடர்பாகவும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையும் வெளியாகி அதிர்ச்சி தந்திருக்கிறது...

நெஞ்சு எலும்பு சுக்குநூறாய் உடைந்து இருக்கிறது .. தலையில் ஆழமான வெட்டு என உடம்பு முழுவதும் 39 இடத்தில் தாக்கிய காயங்கள் என பிரபல நடிகரின் ரசிகர் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக வெளியாகி இருக்கும் குற்றப்பத்திரிக்கையின் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

கன்னட திரையுலகின் சேலஞ்சிங் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகா சாமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார் தர்ஷன். தனது நெருங்கிய தோழியும் நடிகையுமான பவித்ராவை இன்ஸ்டாவில் அவதூறாகச் சித்தரித்து குறுஞ்செய்தியை அனுப்பியதன் விளைவாகவே ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது

இந்த நிலையில் ரேணுகாசாமி கொல்லப்பட்ட விதம் குறித்து வெளியான குற்றப்பத்திரிக்கையின் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜூலை 8ம் தேதி கடத்தப்பட்ட ரேணுகாசாமியை பவித்ரா, தர்ஷன் முன்பாகவே காலணியால் அடித்து இருக்கிறார். பவித்ராவின் காலணியில்

ரேணுகாசாமியின் ரத்த துளிகள் இருப்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

மேலும் ரேணுகாசாமியின் ஆண் உறுப்பில் மெகர் கருவியைப் பயன்படுத்தி மின்சாரம் பாய்ச்சியும், விதைப்பைகளைச் சிதைத்தும் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக

குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேணுகாசாமி, நடிகை பவித்ராவுக்கு இன்ஸ்டா தளத்தில் பவித்ரகவுடா என்ற பெயரில் மெசேஜ் செய்ததும், அதில் நடிகையின் தீவிர ரசிகர் என்றும், உடலுறவு கொள்ள வருமாறு அழைப்பு விடுத்ததும் தொடர்ந்து தனது ஆபாச புகைப்படத்தை அனுப்பியதே கொலைக்கான மூல காரணம் எனவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து தனது மேனேஜர் மூலம் ரேணுகாசாமியுடன் பெண் போல பேசி அவரது விவரங்களைக் கண்டுபிடித்த கும்பல் அதன் பின்னர் தான் கொடூரமாகக் கொலை செய்திருப்பதாகவும் குற்றப்பத்திரிக்கை விபரங்கள் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்