வயநாட்டை மீட்க நிற்காமல் ஓடும் ஆட்டோ... ஒற்றை ஆளாய் களமிறங்கிய சென்னை பெண் உடனே ஓடோடி வந்த KPY பாலா வறுமையிலும் வருமானத்தை வாரி இறைக்கும் மனசு

x

நிலச்சரிவால் நிலைகுலைந்து போயுள்ள வயநாட்டிற்கு ஆட்டோ ஓட்டி நிதி திரட்டி வரும், பெண் ஆட்டோ ஓட்டுநர் குறித்த செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு..

10 நாட்களை கடந்து வயநாட்டில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பேரழிவில் இருந்து வயநாடு மீள ஆதரவுக்கரங்கள் நீண்டு கொண்டு வர...பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள் வரை பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்..

அந்த வகையில் சென்னை பெரம்பூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜி, தனது பங்கிற்கு அருமையான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார்.

வாரத்தில் பிசியான நாட்களான ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையில் வரும் வருமானத்தை நேரடியாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுத்துள்ளார்.

இதற்காக தனது ஆட்டோவில் ஒரு விழிப்புணர்வு பதாகையை வைத்து, உண்டியல் மற்றும் யுபிஐ வசதி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்..

இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், சின்னத்திரை நடிகர் பாலாவும் உடனிருந்து இந்த உதவியை தொடங்கி வைத்துள்ளார்.

5 ஆயிரம் ரூபாயை வழங்கி நடிகர் பாலா இதனை தொடங்கி வைக்க, ஒரே நாளில் 8 மணி நேரம் ஆட்டோ ஓட்டி 14 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ராஜி.

வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்திருக்கும் ராஜியை பாராட்டிய வாடிக்கையாளர்கள், உண்மையான கட்டணத்தை விட அதிகமாக செலுத்தியுள்ளனர், குறிப்பாக 7 ஆயிரம் ரூபாய் வரை வழங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்