கேப்டன் மில்லர் பாணியில் சர்ச்சையில் சிக்கிய `காந்தாரா-2' - ஆதங்கத்தில் மக்கள்
ரிஷப் செட்டி இயக்கத்தில் சுமார் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட காந்தாரா படம், உலகளவில் 450 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இதனால் இரண்டாம் பாகம் மீது எதிர்பார்ப்பு எகிறி உள்ள நிலையில், கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள காவிகுட்டா வனப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எனினும், அனுமதியின்றி காட்டுப்பகுதியில் படப்பிடிப்பை நடத்துவதோடு, வனப்பகுதியில் தீ வைப்பதாகவும், வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட ஹரீஸ் என்ற இளைஞர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உடனடியாக படப்பிடிப்பை வேறு பகுதிக்கு மாற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என உள்ளூர் மக்கள் எச்சரித்துள்ளனர்.
Next Story