தமன்னா முதல் இராணுவ வீரர் வரை.. நாடெங்கும் ரூ.60 கோடி மோசடி - பின்னால் இருந்த 2 கருப்பு கைகள்..

x

தமன்னா முதல் இராணுவ வீரர் வரை.. நாடெங்கும் ரூ.60 கோடி மோசடி - பின்னால் இருந்த 2 கருப்பு கைகள்..

இந்தியா முழுவதும் 60 கோடி ரூபாய்க்கும் மேல் கிரிப்டோகரன்சியில் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

நடிகைகள் தமன்னா உள்பட பல பிரபலங்களை விழாவில் பங்கேற்க வைத்தும், மும்பையில் கப்பலில் பார்ட்டி எனப் பல வழிகளிலும் பல கோடிகளை ஏமாற்றிய நித்தீஷ் ஜெயின், அரவிந்த் குமார் ஆகிய 2 பேரை கோவையில் வைத்து, புதுச்சேரி சைபர் போலீசார் கைது செய்தனர்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அசோகன் என்பவர், இவர்களிடம் 90 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மற்றும் தனது நண்பர்கள் மூலம் 2.60 கோடி ரூபாயை ASHPAY cryptocurrency என்ற இணையதளத்தில் முதலீடு செய்து இழந்துவிட்டதாக அளித்த புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் இந்த மோசடி அம்பலமானது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் 10 பேரை வலைவீசித் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்