அப்பா அம்மா திடீர் விவாகரத்து.. உடைந்து போய் AR.ரகுமான் மகன் போட்ட புதிய உருக்கமான பதிவு
இன்ஸ்டாகிரம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவர், தனது தந்தை ஒரு சாதனையாளர் எனவும், இசைத்துறையில் அவரளித்த பங்களிப்புக்காக மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக அவர் ஈன்ற மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் அவர் ஒரு சாதனையாளர் என குறிப்பிட்டார். இந்நிலையில், ரகுமான் குறித்து தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதை பார்ப்பது வருத்தமளிப்பதாக கூறிய அவர், இதுபோன்ற அவதூறுகள் பரப்புவதை தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், தனது தந்தையின் கண்ணியத்தையும், அவர் நம்மிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் போற்றி பாதுகாப்போம் எனவும் அமீன் கேட்டுக்கொண்டார்.
Next Story