ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை சொல்லும் படம்தான் அமரன்...

x

சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான இந்த அமரன், சுமார் நூறு கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது...

இந்நிலையில், திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நடிகை சாய் பல்லவி தனது செல்போன் நம்பரை பேப்பரில் எழுதி தருவதுபோல் காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருக்கும்..

இந்த காட்சிதான் தற்போது சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவரை தூங்க விடாமல் தவித்து போக செய்திருக்கிறது...

சாய்பல்லவி எழுதி கொடுக்கும் அந்த செல்போன் நம்பரை, அந்த மாணவர் சுமார் 2 வருடங்களாக பயன்படுத்தி வருகிறாராம்..

இந்நிலையில், அமரன் திரைப்படத்தை பார்த்தவர்களில் சிலர், சாய் பல்லவி எழுதி கொடுத்த செல்போன் நம்பர், உண்மையிலே அவரின் நம்பர்தான் என எண்ணி வாழ்த்துக்களை சொல்ல தொடர்பு கொண்டிருக்கின்றனர்..

விடாது அடுத்தடுத்து வந்த செல்போன் அழைப்புகளால் அந்த மாணவர் திக்குமுக்காடிப்போகியிருக்கிறார்..

இதில் சோகம் என்னவென்றால் அவர் இன்னும் அமரன் படத்தை பார்க்கவே இல்லையாம்....

இந்நிலையில், முதலில் புரியாமல் குழம்பிப்போன அவர், பின் விவரம் அறிந்து.. அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி பகிரும் செல்போன் எண் தன்னுடையது எனவும், இது தெரியாமல் பலரும் தொடர்ந்து போன் கால் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பி தன் தூக்கத்தை கெடுப்பதாகவும் வேதனை தெரிவித்திருக்கிறார்..

கூடவே, இது குறித்து இணையதள பக்கத்தில் அவர் அமரன் படக்குழுவை டேக் செய்து புகாரளித்திருக்கும் சூழலில், இந்த விவகாரம் பேசு பொருளாகி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்