பத்தே நாளில் வசூலில் GOAT விஜய்யை முந்தும் PRINCE SK? - இயக்குநர் நெத்தியடி பதிலடி

x

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தாலும் மற்றொரு பக்கம் சர்ச்சைகளும் சளைக்காமல் சுற்றி வருகிறது. இதுகுறித்து பார்க்கலாம் விரிவாக...

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய்பல்லவி நடிப்பில் காதல் காவியமாக உருவாகியுள்ள அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது...

மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்றையும், அவரது காதல் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ்-ன் காதலையும் அழகாய் திரையில் பிரதிபலித்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளனர்...

இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய்பல்லவியின் தோற்றமும், படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது...

இது மட்டுமா....இணையவாசிகள், இளைஞர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களையும் முணுமுணுக்க செய்தது ஜிவி பிரகாஷின் இசை...

இப்படி படத்தை ரசிகர்கள் பாராட்டி கொண்டிருக்க, மற்றொரு புறம் படத்தின் மீது சர்ச்சைகளும் எழத் தொடங்கின...

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் முன் போராட்டங்கள் வெடிக்க...படத்தில் கதாநாயகனான மேஜர் முகுந்தின் பின்புலம் மறைக்கப்பட்டதாக கண்டனங்கள் எழுந்தன...

பயோபிக் படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ்-ன் மதம் குறித்து பகிரங்கமாக பதிவு செய்த சூழலில், மேஜர் முகுந்தின் அடையாளத்தை மறைத்த காரணம் என்ன ? என்ற விவாதங்கள் எழுந்தன..

இப்படி அடுக்கடுக்கான சர்ச்சைகள் அமரன் திரைப்படத்தை சுற்றிக் கொண்டிருக்க....படத்தில் இடம்பெற்ற ஜெய் பஜ்ரங் பலி கோஷத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியது...

படத்தில் இடம்பெற்ற கோஷம் மத ரீதியாக இருப்பதாக குற்றஞ்சாட்டிய சிலர், காஷ்மீர் மக்களுக்கு எதிரான அரசியலை படம் பேசுவதாக குற்றஞ்சாட்டியிருந்தனர்..

இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி...அமரன் திரைப்படம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் மற்றும் பாராட்டை பெற்ற படம் என குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு ராணுவ படை பிரிவினருக்கும் ஒவ்வொரு முழக்கம் இருக்கிறது, ராஜ்புத் 44RR இராணுவ படைப்பிரிவின் முழக்கம் ‘ஜெய் பஜ்ரங் பலி’ என்பதாகும். அதை நான் வேறுமாதிரி மாற்றி எடுக்க முடியாது. மாற்றி எடுத்தால் தான் தவறு என விளக்கமளித்திருந்தார்.

எனக்கும் பல அரசியல் கருத்துக்கள் இருக்கும். ஆனால் என்னுடைய அரசியல் பார்வையையும், சொந்த கருத்தையும் இந்த படத்தில் திணிக்க முடியாது. ஒரு இயக்குநராக என்னுடைய கருத்துக்கள் இந்த படத்தில் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன் என பதிலடி கொடுத்திருந்தார்.

இப்படி சர்ச்சைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வந்தாலும், பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வருகிறது இத்திரைப்படம்...

10 நாட்களில் 200 கோடியை தாண்டி வசூல் செய்து வரும் அமரன் திரைப்படம், இந்த வாரத்திற்குள் 300 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது...

இதனால் டாப் நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதோடு, திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லாக இருப்பதால் ஓடிடி ரிலீஸும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்