நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு... பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்
ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்பட சிறப்பு காட்சியின்போது, அல்லு அர்ஜுனை காண அதிகளவு ரசிகர்கள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வழக்கில், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே, ஜாமினில் சில தளர்வுகளை விதிக்குமாறு, அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்திருந்தார். இதனடிப்படையில், சில தளர்வுகளை நம்பள்ளி நீதிமன்றம் வழங்கியுள்ளது. இனி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும், அல்லு அர்ஜுன் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story