``இது படம் இல்ல.. இதான் ரியாலிட்டி'' - அல்லு அர்ஜுனுக்கு போலீஸ் அடி எப்படி இருக்கும்னு காட்டிய ACP

x

புஷ்பா பட சர்ச்சை தெலுங்கு திரையுலகில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மக்கள் பா ரஞ்சித் எடுக்கும் படங்களை பார்க்க வேண்டும் என ஹைதராபாத் ஏசிபி கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக...

புஷ்பா 2ம் பாகம் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பினாலும், படக்குழுவை விடாது துரத்தி வருகிறது சர்ச்சை...கடந்த இரு வாரங்களாக தெலுங்கு திரையுலகிலும், தெலங்கானா அரசியல் களத்திலும் புஷ்பா படத்தின் சர்ச்சை தான் எதிரொலித்து வருகிறது...

படத்தின் சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது, பின்னர் ஜாமினில் வந்தது, திரைப்பிரபலங்கள் அவரை சந்தித்தது, வீட்டில் கல்வீச்சு என பரபரத்து வருகிறது தெலுங்கு திரையுலகம்...

மற்றொரு புறம், இவ்விவகாரம் தெலங்கானா சட்டப்பேரவையில் எதிரொலிக்க, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரடியாக கருத்து தெரிவித்திருந்தது, இவ்விவகாரத்தை பேசு பொருளாக்கியது...

இச்சூழலில் தான் படத்தின் கதைக்களமும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.. படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தை மரியாதைக்குறைவாக நடத்தியதாகவும் பேசப்பட்டன.

இந்நிலையில் இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹைதராபாத் ஏசிபி விஷ்ணுமூர்த்தி கூறிய கருத்துகள் கவனம் பெற்றன..

அல்லு அர்ஜுன் செய்தது தவறு என்றும், சட்ட நடவடிக்கைகளுக்கு அவர் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும், சினிமாவில் காவல்துறையினரை தவறாக காட்சிப்படுத்தி, அலட்சியமாக நடத்தி, காவல்துறையினரை கீழ்த்தரமாக நடத்துவது போல் நடிக்கிறார் என தெரிவித்துள்ளார்..

மேலும், நிஜ வாழ்க்கயில் அப்படியெல்லாம் நடந்து கொள்ள முடியாது, யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே என குறிப்பிட்ட அவர், அல்லு அர்ஜுன் நடிக்கும் படங்களில் நல்ல விஷயம் ஏதேனும் இருக்கிறதா ? அவையெல்லாம் கதாநாயகர்களை வழிபடும் விதமாக அமைந்துள்ளது. மக்களை ஏமாற்றும் படமாக இருப்பதாக விமர்சித்தார்..

அத்துடன், மக்கள் நல்ல சினிமாக்களை பார்க்க வேண்டும் என்றும், சமூக பிரச்சினைகள் பேசும் சினிமாக்கள் வெளியாவதாக குறிப்பிட்ட அவர், பா ரஞ்சித் போன்ற இயக்குநர்களின் படங்களை எல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என பேசினார்..

இவ்விவகாரம் சர்ச்சைக்கு வழிவகுக்க, டிஎஸ்பி அனுமதியின்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஹைதராபாத் ஏசிபி விஷ்ணுமூர்த்தி, தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஏற்கனவே புஷ்பா பட விவகாரம் புயலை கிளப்பி வர, அடுத்தடுத்த சர்ச்சைகள் ஹைதரபாத்தை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்