``3 கதைகள்.. ஓகே சொன்ன விஜய்..'' - ட்விஸ்ட் வைத்த மகிழ்திருமேனி
தனது கதைக்கு நடிகர் விஜய் ஓகே சொன்னதாக சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் விடா முயற்சி பட இயக்குநர் மகிழ் திருமேனி. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நடிகர் விஜய்க்கு 3 கதைகளை கூறியதாகவும், அந்த மூன்று கதைகளும் பிடித்து போக, எதனை தேர்வு செய்வது எனத் தெரியாமல் அவர் குழப்பத்தில் இருந்ததாக கூறினார். பின்னர் தானே ஒரு கதையை தேர்வு செய்து சொல்ல, நடிகர் விஜய் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் வேறொரு படத்திற்காக உதயநிதி ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டதால் அப்படத்திற்கு முன்னுரிமை கொடுத்ததாக தெரிவித்தார். இதனால் விஜய்க்கு இயக்க வேண்டிய படங்கள் நின்று போன நிலையில், அவருக்கு கூறிய 3 கதைகளும் தன்னிடமே உள்ளதாக கூறியுள்ளார்.
Next Story