“கடவுளே அஜித்தே“ கோஷம் கவலை அளிக்கிறது - நடிகர் அஜித்

x

சாதாரண ஒரு ஹோட்டலில் கொத்து பரோட்டோ போடும் போது உருவான இந்த கோஷம்.. பின் தமிழகம் முழுவதும் பாரபட்சமின்றி ஒலித்து இணையத்தை ஆக்கிரமித்திருந்தது..

நடிகர் அஜித்தின் பெயருடன் கடவுளே என்ற வார்த்தையை முன்னொட்டாக சேர்த்து இளைஞர்கள் எழுப்பிய இந்த கோஷம்.. ஊர் திருவிழா, திரையரங்குகள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் தொடங்கி பின் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கு பெரும் முக்கிய நிகழ்வுகளில் ஒலித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது..

இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து எழுப்பிய இந்த கோஷம், பொதுமக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தியதோடு, பல முக்கிய நிகழ்வுகளின் சம நிலையை சீர்குலைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது...

இந்நிலையில்தான், நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்..

சமீபகாலமாக முக்கிய நிகழ்வுகளிலும், பொதுவெளிகளிலும் தன் பெயருடன் முன்னொட்டாக ஒரு வார்த்தையை சேர்த்து அநாகரிகமாகவும், தேவையில்லாமலும் எழுப்பப்படும் கோஷம் தன்னை கவலை அடைய செய்திருப்பதாக கூறியிருக்கிறார்...

தன் பெயரை தவிர்த்து, தன் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் தனக்கு துளியும் உடன்பாடில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்..

கூடவே, அஜித் என்று என் பெயரில் தான் அழைக்கப்படுவதையே விரும்புவதாகவும் கூறியிருக்கும் அவர், தன்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்...

மேலும், யாரையும் புண்படுத்தாமல் தங்கள் குடும்பத்தை கவனித்தும், கடினமாக உழைத்தும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள் என அறிவுறுத்தியிருக்கிறார்...

இறுதியில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் எனவும் .. வாழு , வாழ விடு எனவும் கூறி அன்புடன் அஜித் என குறிப்பிடப்பட்டு வெளியாகி இருக்கும் அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்