அஜித் வாழ்க! விஜய் வாழ்க! நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்? - அஜித்
துபாயில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், சமூக வலைதளங்கள் மிகவும் Toxic -ஆக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் பயணம் மேற்கொள்வதும், விளையாட்டில் ஈடுபடுவதும் தான் எனவும், பள்ளியில் கல்வி மற்றும் Communication Skill-ஐ கற்றுக் கொள்ளுங்கள் என தன் குழந்தைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். தன் ரசிகர்களுக்கு, தான் சொல்ல வேண்டியது, எண்ணம் போல் வாழ்க்கை நீங்கள் நல்லதே நினைத்தால், அதே போல் நடக்கும், நீங்கள் கெட்டதை நினைக்கும் போது அதற்கேற்ற பலன் தான் கிடைக்கும் என அஜித் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் வாழ்க்கையை பற்றி நினைக்காமல் உங்கள் வாழ்க்கையை வாழ பாருங்கள் என்றும் அஜித் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story