ஹாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த மாஸ் இல்ல.. யாருய்யா இவரு? - உலகையே திரும்பி பார்க்க வைத்த அஜித்
ஹாலிவுட் உச்சநட்சத்திரம் பிராட் பிட்டை விடவும் அஜித்குமாருக்கு அதிக வரவேற்புள்ளதாக கார் ரேஸ் வர்ணனையாளர் வர்ணனை செய்தது ரசிகர்களை குதூகலிக்கச் செய்துள்ளது... துபாயில் அஜித் கார் ரேசில் பங்கேற்று வரும் நிலையில் ரசிகர்கள் ரேஸ் நடைபெறும் இடத்திற்கே சென்று தங்கள் ஆதர்ச நாயகனை உற்சாகப்படுத்தி வருகின்றனர்... இது பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், ரசிகர்களின் ஆதவரைக் கண்டு மலைத்துப் போன ரேஸ் வர்ணனையாளர் அமெரிக்காவின் டோனோ ரேஸிங் சர்க்யூட்டுக்கு பிராட் பிட் வந்த போது அவருக்கு கிடைத்த வரவேற்பை விட அஜித்துக்கு அதிக வரவேற்பு உள்ளதாகவும், அவரது இடத்தில் பிராட் பிட்டை விட பெரிய நட்சத்திரமாக அஜித் இருப்பார் என நினைப்பதாகவும் புகழ்ந்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர்.
Next Story