சிறந்த நடிகர்-ரிஷப் ஷெட்டி,சிறந்த நடிகை-நித்யா மேனன்,மானசி பரேக்
மிகக்குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய காந்தாராவைத் தானே எழுதி...இயக்கி...நடித்திருந்த ரிஷப் ஷெட்டி...சிறந்த நடிகருக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்று அசத்தியுள்ளார்...
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருதும் காந்தாரா வசம் தான் சென்றுள்ளது...
இதேபோல் சிறந்த கன்னட திரைப்படமாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 தேர்வாகியுள்ளது...
இதே போல் தமிழகத்தைச் சேர்ந்த அன்பறிவ் கேஜிஎப் 2 படத்திற்கான சிறந்த சண்டைப் பயிற்சிக்கான தேசிய விருதை தட்டிச் சென்றார்..
மலையாள படமான ஆட்டம் Best Feature film பிரிவில் தேசிய விருது வென்றுள்ளது...
ஆனந்த் ஏகார்ஷி ஆட்டமுக்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்...
சவுதி வெள்ளக்கா மலையாள படத்துக்காக பாம்பே ஜெயஸ்ரீ சிறந்த பின்னணி பாடகியாக தேர்வாகியுள்ளார்...
அதேபோல் இந்தியில் பிரம்மஸ்திரா படத்திற்காக சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை வென்றுள்ளார் ஆர்ஜித் சிங்... சிறந்த இசையமைப்பாளராக தேர்வாகியுள்ளார் ப்ரிதம்...சிறந்த VFX படமாகவும் பிரம்மஸ்திரா தேர்வாகியுள்ளது...
Uunchai எனும் இந்தி படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார் சூரஜ் ஆர் பர்ஜாதியா...
சிறந்த துணை நடிகையாக இப்படத்தில் நடித்த நீனா குப்தா தேர்வாகியுள்ளார்...
அதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் நித்யா மேனனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் குஜராத்தி படமான குட்ச் எக்ஸ்பிரசில் நடித்த Manasi Parekh...
சிறந்த இந்தி படமாக ஷர்மிளா தாகூரின் குல்மொகர் தேர்வாகியுள்ளது...
காந்தாரா, கேஜிஎஃப் 2, ஆட்டம், பிரம்மஸ்திரா ஆகிய படங்கள் இம்முறை அதிக தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது...