புதிதாக சொந்த வீட்டை கட்டிய ஒப்பந்ததாரர் மறு நாளே தற்கொலை

x

கிரகப்பிரவேச நிகழ்ச்சியை முடித்த அடுத்த நாளே ஒப்பந்ததாரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கடலூர் மாவட்டம் குமுடிமூலை கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி. பொறியியல் படிப்பை முடித்த கலைமணி கடந்த 15 வருடங்களாக கட்டுமான நிறுவனங்களுக்கு தேவைப்படும் பொருள்களை கொடுத்து வரும் ஒப்பந்ததாராக வேலை செய்து வருகிறார். பவானி என்பவருடன் திருமணம் நடைபெற்று இரு மகன்கள் உள்ளனர். குமுடிமூலையின் தி.மு.க. கிளைச் செயலாளராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும் கலைமணி செயல்பட்டு வருகிறார்.இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குமுடிமூலையில் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தி அதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தையும் அழைத்து இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் நடந்து வரும் ஒப்பந்தப் பணிகளில் சம்மந்தப்பட்ட இன்ஜினியர் வெங்கட் மற்றும் சூப்பர்வைசர் ராஜ்குமார் தனக்கு பல்வேறு விதங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்து இருக்கிறார். மேலும் முடித்த பணிகளுக்கான பணத்தை கொடுக்காமலும் அலைக்கழிப்பதாகவும், இதனால் 25 லட்சம் ரூபாய் வரை நஷ்டமடைந்ததால் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கலைமணி, உயிரிழந்தவர்

  • "நான் இந்த முடிவு எடுக்கக் காரணமே இன்ஜினியர் வெங்கட் தான்"
  • "ஆரம்பத்தில் இருந்தே என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்"
  • "ரூ 25 லட்சம் வரை நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள்"


கலைமணி கடந்த ஒரு மாதமாகவே மன உளைச்சலில் இருந்தது வந்ததாகவும், சம்மந்தப்பட்ட வெங்கட் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் செய்த வேலைகளுக்குப் பணத்தைத் தராமல் பொய் கணக்குகளைக் காட்டுவதாக தன்னிடம் கூறியதாக அவரது மனைவி பவானி கண்ணீருடன் தெரிவித்தார்.இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பவானி, உயிரிழந்தவரின் மனைவி

  • "இன்ஜினியர் உள்ளிட்ட எல்லோரும் சேர்ந்து பழி வாங்கி விட்டனர்"
  • "பணம் சரியாகக் கொடுக்காமல் டார்ச்சர் செய்துள்ளனர்"
  • "கையில் இருந்த பணத்தைப் போட்டு வேலைகளைச் செய்து உள்ளார்"
  • "அவர்கள் பொய் கணக்கை உருவாக்கி இருக்கிறார்கள்"


Next Story

மேலும் செய்திகள்